Tuesday, March 26, 2013

நான்
வலிகளின்றி வாழ்க்கை இல்லை...
நான்...
வலிகளை ம(றை)றக்கத் தெரிந்தவள்...
அடக்கக் கற்றுக்கொண்ட கோபங்களுக்கு
ஒரே வடிகாலாய் என் கண்கள்...
வெடிக்க நினைக்கும்போதே
ஊமையாய்க் கரைந்துவிடும்...
மறுக்கப்பட்ட கனவுகளோடும்
நிராகரிக்கப்பட்ட விருப்பங்களோடும்
புன்னகையோடு வாழப் பழகியவள்...
இழக்க விரும்பா
குழந்தைத்தனத்தோடு
வாழ்கையை முழுமையாய்
வாழ்ந்திடத் துடிக்கிறேன்...என்னைப் புரிந்துகொண்டோர்
மிகச் சிலர்
புரியாதவர்கள் பிரயத்தனப்பட்டு
என்னைக்
காயப்படுத்த வேண்டாம்காயக்கிடக்கும் காயங்களுக்கு
தண்ணீர் ஊற்றிச் செல்லவேண்டாம்...

நீ வருவாய் என !!!
உன் அழகை நான் உணர்ந்த
தருணம் அது!
களவாடி போன என்  கண்களிடம்
கைதாகிப் போன உன்  கண்களே!
நாளெல்லாம் பேசி விடுகிறேன்
உன்னிடம் ......ஆனால்
நட்பிலிருந்து காதலுக்கு
மாற்றியதை
சொல்ல தவறிவிட்டேன்!
கற்பனையில் என்னை கடத்திச் செல்லும்
உன்  மீதான காதல்
ததும்பியபடி நிற்கும்
என் கண்களில்!
எனக்குள்ளே பதில் ஒன்றை எழுதிக் கொண்டு
உன்னிடம்  எழுப்பும் வினா.. அதில்
மிஞ்சி நிற்பது என்னவோ
ஏக்கமும் ஏமாற்றமும்!
அறிமுகம் ஆன பின்பும்
அறிமுகம் ஆகாமல் கிடக்கும்
அகம்...,(நம் குடும்பம் )
அதிலே மீண்டும் வேண்டும்
ஒரு நேர் கானல்!
தொடர்ச்சியாய் நிகழ்த்தும்
நித்தமொரு போராட்டம்..(நம் குடும்பத்தில் )
அதில் உனக்காக காத்து கிடப்பதும்
ஒரு சுகம் !
ஏனோ பயப்படுவதை
காட்டிக் கொள்ளும் என் இதயம்
எதிர் பாராமல் எல்லை தாண்டிவிட்டது உன்
கற்பனையில்...,
ஏக்கமென்று ஒன்றென
உண்டெனில் என்றாவது
ஏங்கியே செத்து விடும்
உன்னை போல..,
மீண்டும் ஒரு ஜென்மம்
எனக்கு   வேண்டுமென்று!
நித்தம் உன் நினைவுகளையும்,
எதிர்கால நடப்புகளையும்,
எதிர்கொள்ளும்  வலிமையுடன்
காத்துஇருக்கிறேன் ........
உனக்காக அல்ல உன்னால்  முடிமா 
 என்ற உன் கேள்விக்காக......

Monday, March 25, 2013

ஏக்கம்


யாருமற்ற நேரங்களில்
உணரப்படுவது தனிமையல்ல
யாவுமிருந்தும் நீயில்லா தருணத்தில்
உணரப்படுவதே தனிமை.


என்னை பிரிந்தாலும் மரந்தாலும்
காதல் என்பதை நீ நினைக்கும் ஒவ்வொரு கனமும்
என்றும் உன்னிடம் இருப்பேன்
நீ மரந்து போன அதே காதலியாக.

உன் அன்பை உன்மையாக நேசிக்க 
பலபேர் இருக்கலாம்
ஆனால்
உயிராக   சுவசிக்க
நான் மட்டுமே இருப்பேன்.

உன் பார்வை போல் யாரும்
என்னை தாகிடவில்லை
உன் வார்த்தை போல் யாரும்
என்னோடு  பேசிடவில்லை
உன் காதல் போல் யாரும்
எனக்குள் வந்ததுமில்லை...

தினம் தூக்கம் எலுகையில்
கை தொலைபேசியை
தெடுகிறது
பேசாத உன்னிடம் ஏதாவது
வந்துருகிரத  என்று...

உன் உன்மையான அன்பை பற்றி
தெரியாதவர்களீடம் உன் கோபத்தை காட்டதே..
ஏன்னென்றால்  அவர்களூக்கு தெரியாது
உன் கோபமும் ஒரு அன்பு தான் என்று...

சத்தியமாய் சொல்கிறேன்
என்னிடம் உன் நினைவுகள் இல்லை...
உன் நினைவுகளிடம்தான்
நான் இருக்கிறேன்.

எனக்குள் இருக்கும்  உன்னையே உன்னால் 
புரிந்து கொள்ள முடியாத பொது 
உன்னை மட்டுமே நேசித்து உனக்காக வாழும் சுகம் போதும்....
உன்னை எதிர் பார்த்தே வாழ்ந்திருப்பேன் என் வாழ்வின் இறுதி வரையிலும்....!!!